Skip to main content

“மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் எதையும் செய்ய தயங்க மாட்டோம்” - விஜய்

Published on 27/04/2025 | Edited on 27/04/2025

 

TVk leader Vijay says There will be a government as clean as the water of a river

கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் நேற்று (26.04.2025) நடைபெற்றது. இந்த கூட்டமானது கோவையில் உள்ள குரும்பப்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் நடைபெற்ற கூட்டத்தில் தவெக அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சிப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட விஜய் அக்கட்சியின் கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து வாக்குச்சாவடி முகவர்களிடம் உரையாடினார். 

இந்நிலையில் இரண்டாம் நாளாக இன்று(27.04.2025) பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றுள்ளது. இரண்டாம் நாளில் கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய அக்கட்சியின் 13 நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, “என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய கோவை மக்களுக்கும் என்னுடைய தோழர்களுக்கும் என்னுடைய வணக்கம். நேற்று பேசும்போது இந்த மீட் வந்து வெறும் ஓட்டுக்காக மட்டுமே நடக்கப்படுகிற ஒரு மீட் இல்லை என்று நான் சொன்னேன். ஏனென்றால், நம்முடைய கட்சி வெறும் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட ஒரு கட்சி கிடையாது. சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. ஆனால், அதே நேரத்தில் இதனால் மக்களுக்கு ஒரு நல்லது நடக்கும் என்றால் எந்த ஒரு எல்லைக்கும் சென்று அதை செய்வதற்கு நாங்கள் தயங்க மாட்டோம். 

நம்மளுடைய இந்த ஆட்சி அமைந்ததும், ஒரு சுத்தமான ஒரு கிளீனான ஒரு ஆட்சியா இருக்கும். நம்மளுடைய ஆட்சியில் கரப்ஷன் இருக்காது, குற்றவாளி இருக்க மாட்டாங்க. அதனால் எந்தவிதமான ஒரு தயக்கமும் இல்லாமல் தைரியமாக நம்முடைய பூத் லெவல் ஏஜென்ட்ஸ் மக்களை போய் அணுகுங்கள். அறிஞர் அண்ணா சொன்ன ஒரு விஷயத்தை இங்க நான் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, மக்களை நேசி, மக்களுக்காக சேவை செய். இதை நீங்க புரிந்துகொண்டு நீங்கள் செயல்பட்டீர்கள் என்றால் உங்க ஊரு சிறுவாணி தண்ணீர் மாதிரி அவ்வளவு சுத்தமான ஒரு ஆட்சி ஆட்சியா இது அமையும். இன்னும் வலிமையாக சொல்ல வேண்டும் என்றால் நம்முடைய தமிழக வெற்றி கழகத்தினுடைய இந்த ஆட்சி ஒரு தெளிவான ஒரு உண்மையான ஒரு வெளிப்படையான ஒரு நிர்வாகம் செய்யக்கூடிய ஒரு ஆட்சியாய் அமையும்.

அதனால இது நம்ம சார்பா நீங்கள் ஒவ்வொருத்தரும் இதை மக்கள் கிட்ட கொண்டு போய் எடுத்து சொல்லுங்க. பூத்துக்கு வந்து ஓட்டு போடுற மக்களுக்கு உதவியா இருக்க வேண்டியது நம்மளுடைய கடமை. குடும்பம் குடும்பமா கோயிலுக்கு போகிறா மாதிரியும், குடும்பம் குடும்பமா பண்டிகைகளை கொண்டாடுற மாதிரியும், நமக்காக குடும்பம் குடும்பமா வந்து ஓட்டு போடுற மக்களும் அதை கொண்டாட்டமா செய்ய வேண்டும் என்ற மனநிலையை மக்களுக்கு நீங்க ஏற்படுத்துங்க. அப்போது, நீங்கள் தவெக என்பது வேறு ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, விடுதலைப் பேரணி என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இந்த வெற்றியை நாம் அடைவதற்கு உங்களுடைய செயல்பாடுகள் தான் மிக மிக முக்கியம். நீங்கள் தான் இதற்கு முதுகெலும்பே. அதை மனதில் வைத்துகொண்டு நீங்க எல்லாரும் சேர்ந்து செயல்படுங்க. நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்