Published on 09/05/2020 | Edited on 09/05/2020

தமிழக பெண்களுக்கு சிறப்பாக சேவை செய்யும் முயற்சியில், திமுக எம்.பி.யும் மகளிர் அணி தலைவியுமான கனிமொழி, இன்று மாநிலம் தழுவிய மாநாட்டை வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடத்தினர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் நிவாரண முயற்சிகளை மறு ஆய்வு செய்வதற்கும், 'ஒன்றிணைவோம் வா' முன்முயற்சியின் முன்னேற்றத்தை சரிபார்க்கவும், திமுக மகளிர் அணியின் முன்னணி பிரதிநிதிகளை வீடியோ கான்ஃப்ரன்சில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் குடும்ப வன்முறைகள் குறித்து கேட்டறிந்தார். தங்களது மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் மகளிர் அணியினர் உதவிய நிகழ்வுகளையும் விவரித்தனர்.
இந்த கரோனா நெருக்கடியில், தொழிலாளர்கள், ஒற்றை தாய்மார்கள், விதவைகள், உழைக்கும் பெண்கள், திருநங்கைகள் போன்ற சமூகத்தினரை அணுகி அவர்களுக்கு உதவுவது குறித்த யோசனைகளையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டார் கனிமொழி.