கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதி படுகொலை செய்யப்பட்டதற்கும் மற்றும் திருவாடுதுறை சாதிய வன்கொடுமையை கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும்போது திலகவதியின் குடும்பத்தினருக்கு அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
திருவாடுதுறை கொல்லிமலை சாதிய வன்கொடுமை குறித்து பேசிய அவர், சக மனிதனின் வாயில் மலத்தை திணிப்பது பைத்தியகாரத்தனத்தின் உச்சம் என கடுமையாக விமர்சித்தார். வேலூர் குச்சிபாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சாதி மோதல்களை தூண்டுவதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். கமல் பிரச்சாரத்தின் போது இந்து தீவிரவாதி என்று பேசியது தொடர்பாக மோடியின் பேச்சு கோட்சேவிற்கு ஆதரவாக இருப்பதாக கண்டனம் தெரிவித்த திருமாளவளவன், கமலுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.