
சென்னை நந்தனத்தில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த நிலையில், விருதுநகரில் தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு பேசும்போது, “தேவர் சமுதாயத்தை தி.மு.க தலைவர் அவமதித்ததாகக் கூறும் ராஜேந்திர பாலாஜி, தன் சொந்தக் கட்சியைச் சார்ந்த தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவை மிரட்டுகிறார்
ராஜேந்திர பாலாஜிக்கு திராணி இருந்தால், தி.மு.க தலைவரின் குற்றச்சாட்டிற்கு எதிராக வழக்குப் போட்டிருக்க வேண்டும். ராஜேந்திரபாலாஜி நாவை அடக்கவேண்டும், இல்லையெனில் ஜனநாயக முறைப்படி தி.மு.க அவர் நாவை அடக்கும்.

இந்திரா காந்திக்கே கறுப்புக்கொடி காட்டியது தி.மு.க. ராஜேந்திர பாலாஜி எம்மாத்திரம். எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களை அடக்கிவைக்க வேண்டும். இல்லையெனில் தி.மு.க திருப்பி அடிக்கும்” எனத் தெரிவித்தார்.