Skip to main content

தங்க தமிழ்ச்செல்வனை மிரட்டிய ஓபிஎஸ் தரப்பு! கடுப்பான திமுக!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செந்தில்பாலாஜியும், தங்க தமிழ்ச்செல்வனும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 
 

dmk



இந்த நிலையில்  21-ந் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தங்கதமிழ்ச்செல்வன் ஆட்கள் இணையும் விழா தேனியில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடக்கும்போதே மாவட்ட மந்திரியான துணை முதல்வர் ஓ.பி.எஸ். உஷாராயிட்டாராம். பொதுக்கூட்டத்துக்காக போடி பிரிவில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான 15 ஏக்கர் இடத்தை தங்க.தமிழ்ச்செல்வன் தேர்ந்தெடுத்தப்ப, இடம் கொடுக்கக் கூடாதுன்னு ஓ.பி.எஸ். தம்பி ராஜா மூலம் ரமேஷுக்கு மிரட்டல் வந்திருக்கு. அதேபோல் முல்லைப் பெரியாறு  ஆற்றங்கரையில் பார்த்த இடம் ஒன்றையும் கொடுக்கவிடாமல் செய்துவிட்டதாம் ஓ.பி.எஸ். தரப்பு. கடைசியாத்தான் வீரபாண்டி பக்கத்தில் இருந்த கட்சிக்குச் சொந்தமான இடத்தையும் என்.பி.ஆர். நகைக் கடைக்கு சொந்தமான இடத்தையும் சேர்த்து மேடை போட்டிருக்கார் தங்க. தமிழ்ச்செல்வன். 


அதன் பிறகும் கூட்டம் நடக்கும் ஏரியாவில் உயர்மின் கோபுர லைன் போகுதுன்னு மிரட்டியிருக்காங்க. அதேபோல் கூட்டத்துக்கு தனியார் பேருந்துகளை அனுப்பக் கூடாதுன்னு அதன் உரிமையாளர்களையும் மிரட்டி யிருக்காங்க. அப்படியிருந்தும் ஸ்டாலின் பொதுக் கூட்டத்துக்குப் பெரும் கூட்டத்தைக் கூட்டி மிரட்டியிருக்கார் தங்க தமிழ்ச்செல்வன். தேனியில் தங்க தமிழ்ச் செல்வன் கூட்டம் நடத்த ஓபிஎஸ் தரப்பு இடையூறு அதிகமாக செய்த நிகழ்வால் திமுகவினர் கடுப்பில் உள்ளதாக சொல்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்