Skip to main content

டாஸ்மாக் கடை திறப்பை கண்டித்து போராட்டம்... ராஜேஸ்வரி பிரியா கைது... 

Published on 18/08/2020 | Edited on 18/08/2020

 

 

சென்னையில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும் திட்டமிட்டப்படி இன்று காலை சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 

 

இந்த நிலையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா சென்னை அண்ணா நகரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராஜேஸ்வரி பிரியா உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ராஜேஸ்வரி பிரியா, கரோனா காலக்கட்டத்தில் ஆண்கள், பெண்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் உள்ளனர். அப்படி வேலைக்கு செல்வோருக்கும் போதிய ஊதியம் இல்லை. இந்த நிலையில் ஆண்கள் பெரும்பாலானோர் தனது வருமானத்தை மது மற்றும் போதைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குடும்பம் நடத்த முடியாத நிலையில் பெண்கள் தவிக்கின்றனர். 

 

இந்த மாதம் முடியும் வரை ஊரடங்கு உள்ளது. கரோனா முற்றிலும் ஒழிக்கப்படாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டிய அவசியம் என்ன. சென்னையில் கரோனா பாதிப்பு உள்ள நிலையில் அவசர அவசரமாக டாஸ்மாக் கடைகளை திறப்பது நோய் தொற்றுக்கு வழிவகுக்கும்.டாஸ்டாக் கடைகளை மூட வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுப்போம். கைது செய்தாலும், சிறையில் அடைத்தாலும் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றார் உறுதியாக.

 

 

சார்ந்த செய்திகள்