ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் தொடர்பான சர்ச்சைகள் தீவிரமாக கிளம்பியிருக்கு. ஜெயக்குமார் மகன், ஓ.பி.எஸ். மகன், ராஜன் செல்லப்பா மகன்னு அங்கேயும் வாரிசு அரசியல் சகஜமா இருக்குனு அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர். அதனால் எடப்பாடி, இப்ப தன் வாரிசான மிதுனுக்கு கட்சி நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சிருக்கார். இதுக்குக் காரணம், ஓ.பி.எஸ். நடத்திவரும் வாரிசு அரசியலுக்குப் பதில் கொடுக்கத்தான் எடப்பாடியும் இப்படி வரிஞ்சி கட்டியிருக்காராம். தன் மகன் ரவீந்திரநாத்தைக் கொஞ்சம் கொஞ்சமா அரசியல்ல இறக்கிவிட்ட ஓ.பி.எஸ்., இப்ப எம்.பி.யாகவும் ஆக்கி டெல்லிக்கு அனுப்பியிருக்கார்.

அதோட தன் மகனை மத்திய மந்திரியாக்கும் முயற்சியிலும் மும்முரம் காட்டறார். இதையெல்லாம் பார்த்த எடப்பாடி குடும்பத்தினர், நீங்களும் உங்க மகனை அரசியல்ல களமிறக்குங்கன்னு எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்திருக்காங்க. குறிப்பா எடப்பாடியின் மனைவி ராதா, நம்ம பையன் எந்த வகையில் ரவீந்திரநாத்துக்கு குறைச்சல்? நம்ம மிதுனை வெளிச்சத்துக்குக் கொண்டு வரணும்னு உங்களுக்குத் தோணலையா?ன்னு கேட்டிருக்கார். மிதுனும் அப்பாவுக்கு ரொம்ப உதவியா இருக் காராம். அதன் எதிரொலியாத்தான் இப்ப எடப் பாடி தன் மகன் மிதுனை அரசியல் நிகழ்ச்சி களுக்கும் பொதுநிகழ்ச்சிகளுக்கும் தன்னோடு அழைச்சிக்கிட்டுப் போக ஆரம்பிச்சிருக்கார்.

அண்மைக் காலமாக எடப்பாடியின் மகன் மிதுன்தான், அவருக்கான டீலிங்குகள் எல்லாவற்றையும் கவனிச்சிக்கிறாராம். இதையெல்லாம் பார்த்து எரிச்சலாகித்தான், எடப்பாடியின் பக்கபலமான அமைச்சர்களான தங்கமணியும் வேலுமணியும் அப்செட்டாகி சமீபகாலமாக அவரிடமிருந்து விலகி நிக்கிறாங்க. எடப்பாடியும் அவர்களிடம் பேசுவதைக் குறைச்சிக்கிட்டாராம். அந்த ரெண்டு அமைச்சர்களும் எடப்பாடியை ஓவர்டேக் செய்து, டெல்லியின் கடைக்கண் பார்வையை பெற்றிருக்கிறார்களாம். கட்சிக்குள் பவர் செக்டாரா மிதுன் வளர்வதை சீனியர் அமைச்சர்கள் யாரும் விரும்பலையாம். அந்தக் கோபத்தை அவங்க எடப்பாடிகிட்ட வெளிப்படையாவே காட்டறாங்கனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.