Published on 26/08/2019 | Edited on 26/08/2019
பலமான எதிர்க்கட்சியாக தேர்தல் களத்தில் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கும் தி.மு.க.வுக்கு எந்த வகையிலாவது சிக்கல்களை ஏற்படுத்தணும்னு முதல்வர் எடப்பாடி நினைக்கிறாராம். அதனால், சென்னை சிட்டி கமிஷனராக இருக்கும் விஸ்வநாதனுக்கு பதில் அந்தப் பதவியில், டி.ஜி.பி. நாற்காலியை எதிர்பார்த்த ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர்சேட்டை உட்காரவைக்க காய்களை நகர்த்துகிறார். ஒரு காலத்தில் தி.மு.க. தலைமையோடு மிக நெருக்கமான தொடர்பில் இருந்த ஜாபர் சேட்டுக்கு, அவர்கள் பற்றிய ரகசியங்கள் நிறையவே தெரியுமாம்.
அதனால் அவர் மூலமே தி.மு.க. தலைமைக்கு எதிரான நடவடிக்கைகளை வேகப்படுத்த ப்ளான் பண்ணியிருக்காரு எடப்பாடி. அதற்கேற்ப, காவல்துறை மேல்மட்டத்தில் மூவ் நடக்குது. அதே நேரத்தில், சிட்டி கமிஷனரான விஸ்வநாதன் சக அதிகாரிகளிடமும் பொதுமக்களிடமும் பெயர் வாங்கியிருப்பதால் அவரை டிஸ்டர்ப் செய்வதா என்பது பற்றியும் கோட்டையில் முணுமுணுப்பு கிளம்பியிருப்பதாக கூறுகின்றனர்.