Published on 11/07/2019 | Edited on 11/07/2019
இன்றைய சட்டமன்ற நிகழ்வில் நடந்த விவாதத்தின்போது, அமைச்சர் சம்பத், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் விரைவில் தொழில் தொடங்க வருவார்கள் என கூறினார். அப்போது அதை மறுத்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் ‘வரும் ஆனா வராது’ எனக்கூறினார். இதனால் சட்டமன்றத்தில் சிரிப்பலைகள் எழுந்தன.
இதில் சுவாரசியம் என்னவென்றால் அதற்கு முந்தைய நாள் அதாவது, நேற்று நடந்த சட்டமன்ற நிகவின்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு தமிழ்நாட்டில் நிச்சயம் மு.க.ஸ்டாலின் மாற்றத்தை கொண்டு வருவார் எனக்கூறினார். அதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ‘வரும் ஆனா வராது’ எனக்கூறினார். இதுவும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
நேற்று அவர்கள் கூறியதற்கு, இன்று ஸ்டாலின் கூறி பழிக்குப் பழி வாங்கிவிட்டார் என சட்டமன்ற வட்டாரங்கள் பேசிக்கொண்டனர்.