Skip to main content

சசிகலா ஏன் வரவில்லை? பகையை மறக்காத தினகரன்... என்ன தான் நடந்தது... வெளிவந்த தகவல்!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

சசிகலாவின் தம்பியும் அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவருமான மன்னார்குடி திவாகரன் மகன் ஜெய்ஆனந்த்- ஜெ.வின் முன்னாள் வளர்ப்பு மகன் பாஸ்கரன் மகள் ஜெயா திருமணம் மார்ச் 5-ஆம் தேதி சுந்தரக்கோட்டையில் திவாகரன் வீடருகே பிரம்மாண்ட பந்தலமைத்து நடந்தது. அவரது மகள் திருமணத்திற்கு ஒட்டுமொத்த உறவுகளும் வந்திருந்து வாழ்த்தியது. ஆனால் மகன் திருமணத்திற்கு சசிகலா வகையறாவிலிருந்து டாக்டர் வெங்கடேசன் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. சிறையிலிருக்கும் சசிகலா பரோலில் வருவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரமாட்டார் என்பது திவாகரனுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. அதேபோல அரசியல் பகைகளைக் கடந்து தினகரன், இளவரசி குடும்பத்தினர் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பிருந்தாலும் பல நாட்களுக்கு முன்பே தினகரன் தனது உறவுகளுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் கல்யாணத்திற்கு போகக்கூடாது என்று உறுதியாக சொல்லிவிட்டாராம். சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தது திவாகரனை ஆறுதல்படுத்தியது.
 

ammk



அ.தி.மு.க.-அ.ம.மு.க. புறக்கணித்த கல்யாண பந்தலில் உடன்பிறப்புகளே அதிகம் காணப்பட்டனர். மன்னார்குடி, ஒரத்தநாடு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். மேலும் முன்னாள் ஐ.பி.எஸ். பொன்.மாணிக்கவேல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். திவாகரன் ஆதரவாளர் ஒருவர், "பாஸ் பகை மறந்ததுபோல தினகரன் மறக்கல. அதனாலதான் யாரையும் வரவேண்டாம்னு சொல்லிருக்கார். விவேக்கூட வரலன்னா பாருங்க'' என்றார். அதேநாளில் தஞ்சையில் நடந்த அமைச்சர் காமராஜ் உறவினர் இல்லத் திருமணத்தில் ஆளுந்தரப்பினர் மறக்காமல் ஆஜராகியிருந்தனர்.



 

சார்ந்த செய்திகள்