சேலத்தில் நேற்று மகளிரணி விழாவை கொண்டாடியது சமத்துவ மக்கள் கட்சி. அப்போது அவர் அளித்த பேட்டியில், இவ்வாறு கூறினார்.
ஓட்டு வங்கி அரசியலை நோக்கி, பாஜக செல்வதால், அதிமுகவுடன் சந்தர்ப்பவாத கூட்டயமைத்துள்ளது. தேர்தலில் வெற்றி, தோல்விகளைச் சந்திக்கும் தைரியம் வேண்டும். தமிழ்நாட்டின் பெரியக் கட்சிகளே தேர்தலைச் சந்திக்கப் பயப்படுகின்றன. அதிமுகவை கடுமையாக விமர்சித்துவிட்டு, அவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ள, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு, லோக்சபா தேர்தலில், மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும். தனித்து போட்டியிடும் தினகரனின் முடிவு வரவேற்கத்தக்கது. ஏற்கனவே, இரு இயக்கங்களுக்கும் கடுமையாக உழைத்து விட்டேன். இனி, கட்சிக்காக, தமிழக மக்களுக்காக, தனித்துப் போட்டியிடுகிறேன்.
மற்ற கட்சியினர் ஒரு தொகுதிக்கு, 30 முதல் 40 கோடி ரூபாய் ஒதுக்கி செலவு செய்வதால், போட்டி சமமாக இருக்காது, ஆகவே போட்டியை சமன்செய்ய பணம் இல்லாத வேட்பாளர்களுக்கு, தேர்தல் கமிஷன், முன்னதாகவே, 50 ஆயிரம் ஓட்டுகளை ஒதுக்க வேண்டும். மக்கள் பிரச்சனை, சமுதாய மாற்றம் குறித்து, எங்களின் பிரச்சார வியூகம் அமையும். கட்சியினரிடம் விருப்பமனு பெற்றுவருவதால், என் மனைவி ராதிகா போட்டியிடுவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்.