இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்தது. அதை விட அதிமுகவிற்கும், திமுகவிற்கும் இடையே இருந்த வாக்கு வித்தியாசம் திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த தோல்வி குறித்து திமுக கட்சி பொதுக்குழுவில் திமுக தலைமை விவாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் தென் மண்டல முக்குலத்தோர், கொங்கு மண்டல கவுண்டர், வடக்கு மண்டல வன்னியர் என்றெல்லாம் சமூக ரீதியில் ஆளுங்கட்சியோடு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு அரசியல் செய்வதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
உதாரணமாக அண்மையில் நடந்த நாங்குநேரி இடைத்தேர்தலில், அங்கே தேர்தல் பொறுப்பை ஏற்றிருந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, அங்கே அதிருப்தியாக இருந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சரி செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறது. முக்குலத்தோர் முக்குலத்தோர் வாக்கு வங்கியிலேயே கவனமாக இருந்ததாகவும் கூறுகின்றனர். அதனால் காங்கிரஸ் தொகுதியில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாக கூறுகின்றனர். இப்படிப்பட்ட குளறுபடிகளை சரி செய்யும் வகையில் வரும் 10-ந் தேதி கூடவிருக்கும் தி.மு.க.வின் பொதுக்குழு அமையுமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர்.