Skip to main content

ரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்!

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜவின் வியூகம் தமிழகத்தில் எடுபடாமல் போனது பாஜகவின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசியலில் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாஜக எடுத்துள்ள புது திட்டம் ரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை ஒன்றிணைப்பது தான் என்கிறார்கள். திமுக, மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சியில் இருக்கும் அதிருப்தியாளர்களை ரஜினியை வைத்து இழுக்கலாம் என்று பாஜக திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 
 

ops



அதிமுகவில் ஏற்கனவே ஒற்றை தலைமை, இரட்டை தலைமை பிரச்னை மேலோங்கி இருக்கும் நிலையில், கட்சி,ஆட்சி இரண்டையும் ஒருவரின் கீழ் கொண்டு வர  எடப்பாடி எடுத்த திட்டத்தை பாஜக மூலம் முட்டுக்கட்டை போட்டுள்ளார் ஓபிஎஸ். இதனால் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் தர்மயுத்தத்தை ஓபிஎஸ் தொடங்குவார் என்றும், அப்போது அதிமுகவில் இருக்கும் எடப்பாடி அதிர்ப்தியாளர்களை ஓபிஎஸ் பக்கம் இழுத்து ரஜினி, ஓபிஎஸ் என்ற அணியை உருவாக்க பாஜக திட்டம் போட்டு இருப்பதாக கூறிவருகின்றனர். மேலும் திமுகவில் இருக்கும் அழகிரி ஆதரவாளர்களையும் இந்த கூட்டணியில் இணைத்து தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் பாஜக ஒரு திட்டம் போட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான வேலைகளை பாஜக ஆரம்பித்து விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர். 

சார்ந்த செய்திகள்