Skip to main content

பாமகவை வன்முறை கட்சியாக காட்டுவதில் வெற்றி அடைந்திருக்கிறார் இ.பி.எஸ்... -ஈ.ஆர்.ஈஸ்வரன் 

Published on 02/12/2020 | Edited on 02/12/2020
ddd

 

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி இருக்கிறார் தமிழக முதல்வர். பாமகவை வன்முறை கட்சியாக காட்டுவதில் வெற்றி அடைந்திருக்கிறார் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்த போராட்டத்திற்கு அரசாங்கத்தின் தரப்பில் இடமாற்றம் செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டதாக திரு.அன்புமணி ராமதாஸ் சொல்கிறார். அரசாங்க தரப்பில் அனுமதி அளிக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

 

போராட்டம் நடத்துவதற்கு இடத்தை ஒதுக்கி தந்துவிட்டு பல மாவட்டங்களில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னை நோக்கி வந்த பின்னால் தடுத்து நிறுத்தியது ஏன் எனத் தெரியவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். 

 

நடந்த வன்முறைகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் காரணம் என்று தமிழக அரசாங்கமும், தமிழக காவல்துறை தான் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சியும் மாறி மாறி குற்றம் சாட்டுகிறார்கள். போராட்டத்திற்கு அனுமதி அளித்துவிட்டு போராட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களை சென்னை மாநகர எல்லையில் தடுத்து நிறுத்திய பிறகுதான் வன்முறை நடந்தது. 

 

அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களை தமிழக உளவுத்துறை வன்முறை செய்ய தூண்டியதா என்று கேள்வி எழுகிறது. 1980-களில் இடஒதுக்கீட்டுக்காக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்களில் அளவில்லா வன்முறை நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் அனைத்து சமுதாயத்திற்குமான இயக்கமாகவும், தமிழகத்தில் அனைவரும் ஏற்று கொள்வதற்கான கட்சியாகவும், வன்முறை கட்சி கிடையாது என்ற மாற்றத்தை ஏற்படுத்தவும் கடந்த 30 ஆண்டுகளாக டாக்டர்.ராமதாஸ் அவர்கள் முயற்சித்து வருகிறார். 

 

நேற்று நடந்த வன்முறைகளால் 30 ஆண்டுகால பாட்டாளி மக்கள் கட்சியினுடைய முயற்சி வீணானது. மக்கள் மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சி வன்முறையை கையில் எடுப்பார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த நிகழ்வு தமிழக உளவுத்துறையின் திட்டமிட்ட செயல்பாடாக பார்க்கப்படுகிறது.

 

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கான இடஒதுக்கீடு 20 சதவீதமாக இருக்கிறது. அந்த 20 சதவீத முழுமையும் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு கேட்டால் அந்த பட்டியலில் இருக்கின்ற மற்ற சமுதாயங்கள் இடஒதுக்கீடு இல்லாமல் அநாதையாக விடப்படுகிறார்களா என்ற கேள்வியும் மற்ற சாதியினரிடம் எழுந்திருக்கிறது. 

 

தமிழக முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஆணையம் அமைப்போம் என்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இப்போதைக்கு தாமதப்படுத்தி தட்டிக்கழிக்கும் முயற்சி என்று பாமக நிறுவனர் சொல்லி இருப்பதன் மூலம் இந்தப் போராட்டத்தில் பலன் கிடைக்கவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி ஒப்புக்கொண்டிருக்கிறது. 

 

அப்படி என்றால் தமிழகத்தின் ஆளுங்கட்சி நினைத்தது போல மக்கள் மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சி வன்முறை கட்சியாக காட்ட வேண்டும் என்பதில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். சென்ற பாராளுமன்ற தேர்தலிலேயே தேர்தலுக்கு சற்று முன்னால் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அதிமுகவுக்கும் நடந்து கொண்டிருந்த வார்த்தை போர் தேர்தல் நேரத்தில் இரண்டு கட்சி தொண்டர்களையும் இணைந்து செயல்பட விடவில்லை. அதிமுகவினுடைய ஓட்டுக்கள் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு விழவில்லை என்பது அரசியல் வல்லுநர்களுடைய கருத்தாக இருந்தது. 

 

சட்டமன்ற தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொகுதிகளை அதிகம் பெறுவதற்காக அதிமுக ஆட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் இரண்டு கட்சி தொண்டர்கள் இணைந்து பணியாற்றுவது சந்தேகத்திற்குரியதாகும்'' என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.