வன்னிய சமூக மக்களின் கவனத்தைக் கவரும் வகையில், ராமசாமி படையாச்சியார் மணி மண்டபத்தை 25ந் தேதி முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் கோலாகலமா திறந்து வைத்தார்கள். ஆனால் அதிகாரப்பூர்வமாக திறக்கிறதுக்கு முன்பே, பா.ம.க.வினர் அந்த மணி மண்டபத்தைத் திறந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, வன்னிய சமூக மக்களின் பெரும் ஆதரவு பெற்ற கட்சி பா.ம.க. என்று டாக்டர் ராமதாஸ் தொடங்கி கட்சி நிர்வாகிகள் அனைவரும் தெரிவிக்கும் நிலையில், அந்த சமூகத்தைச் சேர்ந்த ராமசாமி படையாச்சியாருக்கு எடப்பாடி அரசு மணிமண்டபத்தைக் கட்டி, அபிமானத்தைப் பெற முயல்வதாக பா.ம.க.வினரிடம் ஒரு புகைச்சல் இருந்தது வருகிறது.
இந்த நிலையில் அரசு சார்பில் மணிமண்டபத்தைத் திறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்பாக, 23-ந் தேதியே பா.ம.க.வின் தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான ஒரு டீம், கடலூர் மஞ்சக்குப்பத்தில் கட்டப்பட்டிருக்கும் மணிமண்டபத்துக்கு சென்று, அதன் கதவுகளை திறந்தது வைத்துள்ளனர் என்று கூறுகின்றனர். பின்னர் உள்ளே எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, மண்டபத்தின் உள்ளே நிறுவப்பட்டிருக்கும் படையாச்சியார் சிலைக்கு முன்பாக கும்பலாக நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டு அந்த டீம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதன்பின் அந்தப் படத்தை அவங்க சமூக வலைத்தளங்களில் பரப்ப ஆரம்பித்துள்ளார்கள். இது அ.தி.மு.க. தரப்பில் சர்ச்சைகளையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முதலில் எரிச்சலான முதல்வர் எடப்பாடி, அவங்க அரசியல் நமக்குப் புரியலையே என்று கூறிவிட்டு, சரி விடுங்க பாத்துக்கலாம் என்று நெருங்கிய வட்டாரத்தில் கூறியுள்ளார். மேலும் நாம் நம்ம பாணியில் திறந்துவைப்போம் என்று 25-ந் தேதி ஓ.பி.எஸ் உடன் சென்று , மணிமண்டபத்தைத் திறந்து வைத்துள்ளார்.