Published on 22/02/2020 | Edited on 22/02/2020
சென்னை, அடையாறு ஆற்றில் பெருமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கிலிருந்து மக்களை காப்பாற்ற அடையாறு ஆற்றின் கரைகளில் வெள்ளப் பாதுகாப்பு தடுப்புச் சுவர் கட்டப்பட்டு வருகிறது. சில மாதங்காளாக நடைபெற்றுவரும் இந்த பணியில் மணல் கொள்ளை உள்ளிட்ட ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், அதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டையில் உள்ள ஆடு தொட்டி பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் தலைமையேற்று நடத்தினார்.