நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவிலில், பாஜக சார்பில் காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டம் நடைபெற்ற போது, கூட்டத்திலிருந்து மது போதையிலிருந்த ஒருவர், மேடையை நோக்கி கத்தியபடி வேகமாக வந்தார். தமிழிசையை தாக்க வந்ததாக எண்ணி பாஜகவினர் அவரை கடுமையாகத் தாக்கினர். 'அடிக்க வேண்டாம்' என தமிழிசை கூறியும் நிறுத்தவில்லை. காவல்துறையினர் அவரை மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இன்று அவர் தெளிவானவுடன் விசாரித்தபோது, "நான் தமிழிசையை திட்டவில்லை. நான் அவர் பேச்சுகளை ரசிப்பவன். அவரது கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொள்பவன். நான் போதையில் மேடை அருகே சென்றதால் அங்கிருந்தவர்கள் என்னை சந்தேகப்பட்டு அடிக்க ஆரம்பித்தனர். அவர்களைத்தான் நான் திட்டினேன், தமிழிசையை அல்ல" என்று ஷாக் கொடுத்திருக்கிறார். அவர் பெருங்குடி சந்தியா நகர், திருக்குமரன் தெருவை சேர்ந்த ரமேஷ் என்று காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர்.