சென்னை எம்.ஜி.ஆர். நகரிலுள்ள அன்னை சத்யா நகர் வாழ் மக்கள் வருடாந்திர சீட் கட்டி அதில் வரும் பணத்தை வைத்து தீபாவளி, பொங்கள் பண்டிகையை கொண்டாட ஏதுவாக இருக்கும் என நினைத்தனர். மக்கள் கட்டிய ரூபாய் 25 லட்சம் பணத்தை சீட்டு நடத்திய கவிதா, பாபு, முனிரத்தனம் ஆகிய மூவரும் ஏமாற்றியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள்
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது, வழக்குப்பதிவு செய்யாமல் இரண்டு வருடமாக அலைக்கழித்து வந்துள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் இணை ஆணையாளரை சந்தித்தப் பிறகே வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக மூன்று குற்றவாளிகளும் 29.12.2019ல் பிடிப்பட்ட நிலையில், அதில் முனிரத்தினம் என்பவர் முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவரின் பர்ஷனல் உதவியாளர் என்பதால், தென்சென்னை அதிமுக நிர்வாகி ஒருவர் மூலமாக விசியத்தை பேசி முடிக்க முயன்றனர். இதையடுத்து முனிரத்தனத்தை கைது செய்யமால் மற்ற இருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணம் கட்டி ஏமாற்றப்பட்ட மக்கள் நியாயம் கிடைக்கும் என்று காவல்துறைக்கு சென்றால், பணத்தை கொள்ளை அடித்தவர்களிடமே கைக்கோர்த்துக்கொண்டு அவரக்ளை கைது செய்யாமல் விட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர். ஏமாற்றியவர்கள் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு.