சென்னை மாத்தூரில், தமிழக பாஜக சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மதுரையில் பள்ளி மாணவியின் தந்தையை அடித்த வீடியோ காட்சியினை பார்த்த பொழுது நம் சமுதாயம் எந்த அளவிற்கு கெட்டுப் போயிருக்கிறது என்பது தெரிகிறது. காவல் துறையின் மீது எள் அளவிற்கு கூட பயம் கிடையாது. பெண்ணின் மீது மாணவன் என்ற போர்வையில் அந்த கயவன் நடந்து கொள்கிறான். அதன் பின் மாணவியின் தந்தையுடன் கைகலப்பு. இது புதிது அல்ல. அடிக்கொருமுறை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இது நடக்க ஆரம்பித்துவிட்டது.
சில நேரங்களில் காவல்துறை கடுமையாகத் தான் நடந்துகொள்ள வேண்டும். காவல்துறை கடுமையாக நடந்து கொள்ளும் போது பாஜக துணையாக இருக்கும். இது போன்ற விஷயங்களில் காவல்துறை கடுமையாக இல்லை என்றால் நான் நீங்கள் கூட (பத்திரிகையாளர்களை கை காட்டி) சாலைகளில் செல்ல முடியாது. அதனால் தமிழக அரசு காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும்.
இல.கணேசன் பாஜகவின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்தார். தொலைபேசியில் என்னை அழைப்பை விடுத்தார். எனக்கு இல.கணேசன் இல்ல நிகழ்விற்கு செல்ல வேண்டும். மம்தா பானர்ஜி பங்கு கொள்ளும் இல்லத்திற்கு செல்லக் கூடாது என்ற எண்ணம் இருந்தது.
சாமானிய மக்களுக்கு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் என்பது அரசு செய்யும் வேலைகளையும் பின்னால் இருந்து அவர்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் அமைச்சர் சேகர்பாபு சொல்வதை பெரிதாக பொருட்படுத்த வேண்டாம்” எனக் கூறினார்.