




Published on 18/04/2019 | Edited on 18/04/2019
2019 மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. தேர்தலில் அனைவரும் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தது. தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு திருமணமான புது தம்பதிகள் மணக்கோலத்திலேயே வாக்களிக்க வந்தனர். சிவா - யுவராணி ஆகியோருக்கு இன்று காலை திருமணம் நடந்தது. திருமணமானவுடன் தங்கள் பெற்றோருடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.