முரசொலி நில விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரி்ப்பதற்குத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதை, அவசர வழக்காக எடுத்து விசாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது முரசொலி பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின நல ஆணைய விசாரணைக்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பதிலாக பிரதிநிதி ஆஜராக அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டனர். மேலும், முரசொலி நிலத்திற்கான பட்டா, கிரயபத்திரம் உள்ளிட்ட ஆவணங்களின் விவரங்களை ஆணைய விசாரணைக்கு அனுப்ப திமுக தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, எந்த ஆவணங்கள் அடிப்படையில் முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது என, பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசனும், தேசிய பட்டியலின ஆணையமும், ஆணைய துணைத் தலைவரும் விளக்கம் அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 21-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அங்கு வருவதற்கு தான் வெளிநடப்பாம் pic.twitter.com/F8x3TcKvIG
— H Raja (@HRajaBJP) January 6, 2020
இந்த நிலையில் பாஜகவின் தடா பெரியசாமி முரசொலி நில விவகாரம் தொடர்பாக இன்று டெல்லியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தடா.பெரியசாமி ஆஜரானார். அதன் பின்பு டெல்லியில் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களை சந்தித்த தடா பெரியசாமி பேசும் போது, பஞ்சமி நில விவகாரத்தில் திமுகவிற்கு ஆதரவாக அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது என்று பாஜகவின் தடா.பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும் பஞ்சமி நில விவகாரத்தில் அரசு மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் டெல்லியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜராவது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தடா.பெரியசாமி நேற்று பதிவிட்டு இருந்தார். அதற்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளிக்கும் வகையில், திமுக அங்கு வருவதற்கு தான் வெளிநடப்பாம் என்று திமுகவை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு திமுகவினர் சமூக வலைத்தளங்களில் தனது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.