சீன அதிபரை சந்திக்க சென்னை வந்த மோடியை யார் யார் ஏர்போர்ட்டில் வரவேற்பது என்று தீர்மானித்தவர் முன்னாள் அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தான் என்று கூறிவருகின்றனர். கட்சியின் பல பிரிவு பிரமுகர்களுக்கும் அனுமதி வழங்கிய பொன்னார், தெலுங்கானா கவர்னர் தமிழிசையின் ஆதரவாளர்களான மாநில துணைத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எம்.என்.ராஜா, அரசகுமார், இளைஞரணிச் செயலாளர் வினோஜ் உள்ளிட்ட எவரையும் அனுமதிக்கலை என்று அக்கட்சி வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.
இது தொடர்பான புகார்கள் அமித்ஷாவரை சென்றுள்ளது. அதேபோல் தேசிய செயலாளரான ஹெச்.ராஜாவும், பிரதமரை வரவேற்கும் அதிகாரத்தை பொன்னாருக்கு யார் கொடுத்தது என்று காட்டம் காட்டிக்கிட்டு இருக்கார். இது ஒரு பக்கம் என்றால், மோடி சென்னை வந்து இறங்கிய போது தன்னை வரவேற்க வந்த த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனைப் பார்த்து, டெல்லிக்கு வாங்க... உங்ககிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்குன்னு சொல்ல, வாசன் மனதில் பல்வேறு கணக்குகளை போட்டு வருவதாக சொல்லப்படுகிறது. பாஜக கட்சியிலும் பிரதமர் மோடி திடீரென்று வாசனை டெல்லிக்கு எதுக்கு மோடி அழைக்கிறார் என்று அதிர்ச்சியில் இருப்பதாக கூறுகின்றனர்.