Skip to main content

“சும்மா தல தலன்னு சொல்றவங்க இல்ல...” - தோனி குறித்து செல்லூர் ராஜூ

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

Sellur Raju on CSK captain Dhoni

 

மதுரையில் பரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.

 

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “அமைய இருக்கும் புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் அமைப்பதற்கு எல்லோரும் பிரதமரைப் பாராட்ட வேண்டும். இந்த விழாவினை மற்ற கட்சிகள் புறக்கணித்தாலும் திமுக அதில் கலந்து கொள்ள வேண்டும். அதுதான் எங்களது ஆசை. தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு சட்டம் கொண்டு வரவேண்டும், திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என திருமாவளவன் சொல்லியுள்ளார். ஆனால் மவுண்ட்பேட்டன் நேருவுக்கு வழங்கிய செங்கோல் குறித்து கொச்சைப்படுத்தக்கூடாது. திருமாவளவனை நாங்கள் மதிக்கிறோம். இதை அவர் கொச்சைப்படுத்தக்கூடாது. இதற்கு மதச்சாயம் பூசக்கூடாது. தமிழ்நாட்டில் நாம் தமிழர் என்று சொல்லுவோம். வெளிநாடு போனால் நாம் இந்தியன் என சொல்லுவோம். மொழியால் நாம் தமிழர், இனத்தால் நாம் இந்தியர். இதுதான் இன்று நிலை.

 

திமுக ஜனாதிபதியை மதிக்கவே இல்லை. ஜனாதிபதியாக பதவியேற்ற பெண் முதல்முறை மதுரைக்கு வருகிறார். அவரை வரவேற்க மூத்த அமைச்சர் கூட வரவில்லை. மனோ தங்கராஜை தான் அனுப்பினார்கள். இதுதான் திமுகவின் லட்சணம். ஐபிஎல் போட்டிகளில்; நிச்சயமாக சென்னை அணிதான் வெற்றி பெறும்.  தோனி சாதனை படைக்கனும்.  நாம் எல்லாம் எதிர்பார்ப்பது தல வெற்றி பெற வேண்டும். உண்மையான தல... சும்மா தல தலன்னு சொல்றவங்க இல்ல...” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்