கரூர் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர் உள்பட 601 பதவிகளை பிடிக்க, 1,654 பேர் களத்தில் உள்ளனர். தி.முக., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும், அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கடந்த 10 நாட்களாக பிரசாரம் செய்தனர். ஆனால், கட்சி தலைவர்களோ, நடிகர், நடிகைகளோ பிரசாரத்துக்கு வரவில்லை.
அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்எல்ஏ முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி. பிரச்சாரத்தில் அவர் பேசிய பேச்சு தான் தற்போது வரை கரூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பிரச்சாரத்தில் பேசிய செந்தில்பாலாஜி, அதிமுக கும்பல் தேர்தலுக்கு இரண்டு நாளைக்கு முன்பு எல்லா பகுதிகளிலும் பூமி பூஜை நடத்தினாங்க, பூமி பூஜை நடத்தினாங்களே, அதற்கு எதாவது டெண்டர் நோட்டிஸ் எதுவும் காட்டினாங்களா? என்ன வேலை, எவ்வளவு ரூபாய்க்கு என்று சொன்னார்களா ? எதுவுமே கிடையாது எல்லாமே ஏமாற்று வேலை.
மாடு வழங்கும் திட்டத்தில் அந்த அந்த ஏரியா அதிமுக கிளைக்செயலாளருக்கு மாடு கொடுத்திருப்பாங்க. பஞ்சாயத்து கிளார்க் பதவியை 20 இலட்ச ரூபாய்க்கு விற்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி மாதிரியே எல்லா மந்திரிகளுக்கும் இருக்கிறார்கள்.
கரூரில் வெறும் 441 ஓட்டில் ஜெயிச்சவர்கள் இப்போது சதுரடி 22,000 ரூபாய்க்கு எல்பிஜி பெட்ரோல் பங்க் வாங்கியிருக்கிறார். நீ இல்லன்னு சொல்லு, தைரியமான ஆண் மகனாக இருந்தா என் மீது கேஸ் போடு, நான் நிரூபிக்கிறேன். நீ வாங்கலன்னு கேஸ் போடு, நீ வாங்கினதை நிரூபிக்கிறேன். இதே மாதிரி 60 டேங்கர் லாரி இருக்கு, 10 மெகாவெட் காற்றலை போட்டிருக்கிறார். கரூர் சிப்காட்டு அருகில் 120 ஏக்கர் நிலத்தை பஸ்ஸாண்டு கொண்டு வரேன்னு விலைக்கு வாங்கியிருக்காங்க. எடப்பாடி பழனிசாமி போலவே அந்த அமைச்சர்களும் சம்பாதிக்கிறார்கள் என அடுக்கடுக்காக புகார் கூறினார். சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதற்கு முன்னோட்டமாக வரும் இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றிபெறும் என்று பேசினார்.