
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன. இவர் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் மாநகராட்சிக்கு தண்ணீர் திறந்து விடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று(30.3.2025) இரவு வீட்டின் அருகே உள்ள ஐ.ஓ.பி.வங்கி ஏ.டி.எம்.மில் குடிபோதையில் தனது தாயாரின் ஏ.டி.எம்.கார்டை எடுத்துக்கொண்டு பணம் எடுக்கச் சென்றுள்ளார். ஆனால் ஏ.டி.எம்-யில் பணம் எடுக்க முற்பட்டபோது அதில் பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முரளி முதலில் காலால் ஏ.டி.எம்.இயந்திரத்தை எட்டி உதைத்து விட்டு பின்பு கைகளாலும் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இந்தநிலையில் இன்று காலையில் ஏ.டி.எம்.இயந்திரம் பகுதிக்கு வந்த காவலாளி ஏ.டி.எம்.இயந்திரம் உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு வங்கியின் மேலாளருக்கு உடனே தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வங்கியின் மேலாளர் ஏ.டி.எம்.மிஷின் உடைக்கப்பட்டது குறித்து கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் முரளி பணம் எடுக்க வந்த போது ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்துள்ளது தெரியவந்தது.
இதனிடையே ஏ.டி.எம் மையத்தில் இரண்டு இயந்திரங்கள் இருந்துள்ளது. அதில் ஒன்று பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. மற்றொன்று பயன்பாட்டில் இருந்துள்ளது. ஆனால், பணம் எடுக்க வந்த முரளியோ குடிபோதையில் பயன்பாட்டில் இல்லாத இயந்திரத்தில் கார்டை போட்டுவிட்டு பணம் வரவில்லை என்ற ஆத்திரத்தில் இயந்திரத்தை உடைத்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் முரளியை கைது செய்தனர்.
மையத்தில் இறந்த மிஷினில் இருந்துள்ளன.ஒன்று ஏற்க்கனவே பயன் பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது.மேலும் மற்றொன்று பயன் பாட்டில் இருந்துள்ளது.ஆனால் முரளியோ குடிபோதையில் பயன்பாட்டில் இல்லாத ஏ.டி.எம்.மிஷினில் கார்டை போட்டுவிட்டு பணம் வரவில்லை என்ற ஆத்திரத்தில் உடைத்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முரளியை போலீசார் கைது செய்த்தனர்.