


Published on 04/04/2021 | Edited on 04/04/2021
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 6ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரை கால அவகாசம் இன்று (04.04.2021) மாலை 7 மணியுடன் நிறைவடைகிறது. அதனால், அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை, துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து சவுகார்பேட்டையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.