





திமுக தலைவராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டு தொடங்கும் நிலையில் கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சு.திருநாவுக்கரசர் தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திமுக தலைவராக இரண்டு ஆண்டுகள் வெற்றிக்கொடிகளை நாட்டி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுகவின் தலைவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். தன் கட்சிக்காரர்களை மட்டுமல்லாமல் கூட்டணி கட்சி கட்சிக்காரர்களையும் அரவணைத்து செல்கின்ற பாங்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
இதேபோல் கூட்டணிக் கட்சியினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.