Published on 28/01/2019 | Edited on 28/01/2019

தமிழக முன்னேற்றத்திற்கான எந்தத் திட்டத்தையும் ஆதரிக்காமல், போராட்டம் மட்டுமே செய்கிறது மதிமுக. மோடிக்கு எதிராக வைகோ கறுப்புக்கொடி காட்டியது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 19ம் தேதி கன்னியாகுமரி வர வாய்ப்பிருக்கிறது, மதுரையில் நடந்த விழாவில் முன்கூட்டியே தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டிருக்கும். பாஜக கூட்டணி குறித்து உரிய நேரத்தில் சொல்வோம். குறைந்தபட்சம் 30 இடங்களைக் கைப்பற்றுவோம். என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.