Skip to main content

இதனால் எடப்பாடி அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை...

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ., விரைவில் குற்றப்பத்திரிகையைத்  தாக்கல் செய்யப் போறாங்கன்னு ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் பாதுகாப்புப் பிரிவு டி.ஜி.பி.யான அசுதேஷ் சுக்லா உட்பட, காவல்துறையின் மிக முக்கிய அதிகாரிகள் அனைவரும் விசாரிக்கப்பட்டிருக்கிற நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யின்  டி.ஜி.பி.யான ஜாபர்சேட் மூலம் சரிபண்ணியிருக்காம் ஆளுந்தரப்பு. அதனால் சி.பி.ஐ. தாக்கல் செய்யப்போகும் குற்றப்பத்திரிகை, எடப்பாடி அரசுக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தாதுன்னு காவல்துறை தரப்பில் நம்பிக்கையா சொல்றாங்க. 

 

eps



மேலும் அதிகாரிகள் தரப்பு செய்தி ஒன்று சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அது பற்றி விசாரித்த போது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் தொடர்பான ஒரு பெரிய பட்டியல் எடுக்கப்பட்டிருக்கு. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்கித்தான் வெளியிடமுடியும்ங்கிறதால, ஆணையத்துக்கு அனுப்பி அனுமதியும் வாங்கியாச்சாம். விரைவில் ஒரு பெரிய டிரான்ஸ்பர் மேளாவை நாம் பார்க்கலாம்னு கோட்டை வட்டாரத்தில் சொல்லிட்டு வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
 

 

சார்ந்த செய்திகள்