Published on 18/01/2022 | Edited on 18/01/2022

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளுடனான உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.