Skip to main content

உள்ளாட்சித் தேர்தல்... தாராளமாக புழங்கும் மதுபான பாட்டில்கள்... 

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால், முன்னதாகவே சிலர் பெட்டி பெட்டியாக மதுபான பாட்டில்களை வாங்கி ஆதரவாளர்களுக்கு கொடுத்துள்ளனர். மேலும் மதுபான பாட்டில்களை வாங்கி சிலர் பதுக்கி வைத்துள்ளனர். 

 

tasmark sarakku



அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் நடுவில் மதுபாட்டில் பண்டல் வைத்துக் கொண்டு இருவர் டூவீலரில் வேகமாக செல்லும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்தப் புகைப்படம் இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் இருந்து சிறுகடம்பூர் செல்லும் சாலையில் எடுக்கப்பட்டது. இதுபோன்ற காட்சிகளை இப்போது எல்லா ஊர்களிலும் பார்க்கலாம். குறைந்தபட்சம் இந்த உள்ளாட்சி தேர்தல் முடியும் வரையாவது ஒவ்வொரு குடிமகனுக்கும் இரண்டு பாட்டில்களுக்கு மேல் விற்பனை இல்லை என்று அறிவிக்கலாம். தமிழக அரசே மது விற்று தமிழக காவல்துறையே அதை பிடிப்பது என்பது கொம்பை விட்டு வாலை பிடிப்பதற்கு சமம் என்கின்றனர் பொதுமக்கள். 
 

 

சார்ந்த செய்திகள்