Skip to main content

ஜூனியர் விகடன் செய்தியாளர் மற்றும் புகைப்பட கலைஞர் மீது வழக்கு: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

Published on 30/12/2019 | Edited on 30/12/2019

 

ஜூனியர் விகடன் செய்தியாளர் மற்றும் புகைப்பட கலைஞர் மீது மார்த்தாண்டம் மற்றும் களியாக்காவிளை காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

கடந்த 27-12-2019 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்களிடம், தேசிய குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக செய்திக்காக நேற்று கருத்தறிய சென்ற ஜூனியர் விகடன் இதழின் செய்தியாளர் சிந்து மற்றும் புகைப்பட கலைஞர் ராம்குமார் ஆகிய இருவர் மீது மார்த்தாண்டம் மற்றும் களியாக்காவிளை காவல்நிலையங்களில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

 

Chennai


 

வழக்குக் கொடுமையை பார்க்கும்போது ஆங்கிலேய ஆட்சிக்காலத்தைப் போல வாய்ப்பூட்டு போடும் சட்டத்தை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் கையில் எடுத்துள்ளனர் எனக் கருதுகிறோம். இந்த வழக்கை கருத்துரிமைக்கு எதிரான செயலாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது. இந்த எதேச்சதிகார மிரட்டல் வழக்கை கடுமையாக கண்டிப்பதுடன் உடனடியாக வாழ்க்கை திரும்பப் பெற வேண்டும் என்று காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
 

பாதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் செய்தியாளர் சிந்து மற்றும் புகைப்பட கலைஞர் ராம்குமாருக்கு அனைத்து வகையிலும் துணை நிற்போம். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்