Skip to main content

"மோடி இந்தியில பேசுறாரு.. மியூட்ல போடுங்க ப்ளீஸ்!" - கதிர் ஆனந்த் அதிரடி!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

Kathir Anand MP muted PM Modi's speech

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெற்ற ஏழைகள் நல மாநாட்டில் உரையாற்றினார். மேலும், அந்த மாநாட்டில் நாட்டுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் மக்கள் காணொளி காட்சி மூலம் பங்கேற்றனர். அதன்படி தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். 

 

அப்போது, “பிரதமர் இமாச்சல் பிரதேசத்தில் இருந்து பேசிக்கொண்டு இருக்கிறார். நாம் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதனால், அதன் ஒலியை குறைத்துவிட்டு..” என்று தெரிவித்து விட்டு, தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்தும் முதலமைச்சரின் வேலூர் வருகை குறித்தும் விளக்கிப் பேசினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்