Published on 30/10/2018 | Edited on 30/10/2018

கராத்தே தியாகராஜன் இன்று காலை ரஜினியை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க ரஜினியை சந்தித்தேன். முரசொலியில் வெளிவந்த கட்டுரை குறித்தும் விவாதித்தோம். ரஜினி தலைமையில் ஒரு அணியும், ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும் வர வாய்ப்பு உள்ளது. பாஜகவின் ஊதுகுழலாக கமல் செயல்பட்டு வருகிறார் என்றார்.