Skip to main content

கோவை தெற்கில் கமல்ஹாசன் தோல்வி! 

Published on 02/05/2021 | Edited on 02/05/2021

 

 Kamal Haasan defeated in Coimbatore South!

 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 158 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 76 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னனியில் உள்ளது.

 

இந்நிலையில் கோவை தெற்கில் காலையில் இருந்து முன்னனியில் இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மாலையில் பின்னடைவை கண்டிருந்த நிலையில் தற்பொழுது அங்கு பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றபெற்றுள்ளார். கமல்ஹாசன் 51,087 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் வானதி ஸ்ரீனிவாசன் 52,526 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளர்.

 

 

சார்ந்த செய்திகள்