Skip to main content

ஜெயலலிதாவே விரும்பாத நிலையில், எனது குடும்பத்தினரே... - திவாகரன் பேச்சு

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
sudhakarn



எனது குடும்பத்தினரே ஜெயலலிதாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தினர் என்று சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளருமான திவாகரன் கூறியுள்ளார்.
 

மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகத்தின் தலைமை அலுவலத்தில் சசிகலாவின் கணவர் நடராஜன் படத்திற்கு மாலை அணிவித்து அவர் பேசுகையில், 
 

ஜெயலலிதாவே விரும்பாத நிலையில், வளர்ப்பு மகன் என சுதாகரனை கொண்டு வந்து அவருக்கு ஆடம்பரமான திருமணத்தை செய்து வைத்து அதன் மூலம் ஜெயலலிதாவிற்கு மிகபெரிய அவப்பெயரை எனது குடும்பத்தினரே ஏற்படுத்தினர். 

 

mannargudi dhivaharan


 

தற்போது கூட அதிமுகவை ஒன்றிணைக்க சில முயற்சிகளை நான் எடுத்தேன். தினகரனிடம் இருக்கும் எம்எல்ஏக்களில் பெரும்பாலானவர்கள் எனது ஆதரவாளர்கள்தான். 
 

இரு அணியும் இணைவதற்கு அவர்கள் ஆதரவு அளித்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியில் இருப்பவர்கள் ஒத்துழைக்கவில்லை. அவர்களை வேறொருவர் இயக்குகிறார். 
 

அதிமுகவை பலப்படுத்த அவர்கள் விரும்பவில்லை. கிடைக்கும் வரை லாபம் என்று இயங்கிக்கொண்டிருக்கின்றனர். கட்சியை அழிப்பதற்கு வெளியில் இருந்து யாரும் வரவேண்டியதில்லை. அந்த வேலைகளை இவர்களே செய்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பேசினார்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்