பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றும்போது, பல்வேறு திட்டங்கள் குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் பேசியிருந்தார். அதன்படி 20 லட்சம் கோடி ரூபாய்க்கு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளார். இது பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமுடக்கத்தை நீட்டிப்பதாகவும் அறிவித்துள்ளார். அந்த முடக்கம் எதுவரை தொடரும் என்று மே 18 ஆம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கு இதுவரை செயல்பாட்டில் இருந்து வந்த ஊரடங்கை விட மாறுதலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.20 லட்ச கோடி மதிப்பிலான திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்து வருகிரர். அதோடு தற்போது ஜூன் 30 வரை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில் சேவைகள் ஜூன் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதால் நான்காம் கட்ட ஊரடங்கு முன்புபோல் இரண்டு வாரம் என்று இல்லாமல் ஒரு மாதம் முழுவதும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் ஜூலை 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வாழ்வாதரம் குறித்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.