
திமுக தலைவர் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக இன்று மாலை 4.15 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அவருடன் காங்கிரஸ் மேலிடம் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோருடன் வந்தனர்.

காவேரி மருத்துவமனையில் கலைஞரின் உடல்நலம் குறித்து கேட்டு அறிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல். அப்போது அவர், ‘’திமுக தலைவர் கலைஞரை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் நேரில் பார்த்தேன். நலமுடன் உள்ளார். கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழக மக்கள் போன்று கலைஞர் மன உறுதியுடையவர். சோனியாகாந்தியும் கலைஞர் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கும் திமுக தலைவர் கலைஞருக்கும் நீண்ட கால நட்பு இருந்து வருகிறது’’ என்று கூறினார்.