தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம், போலீஸ் குடியிருப்புகளுக்கு தீ வைத்தது எல்லாம் பொதுமக்கள் அல்ல. சமூக விரோதிகள் மற்றும் விஷக்கிருமிகள். அவர்கள்தான் இந்த செயலை செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர் என்று கூறியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்று கூறியதற்காக அனைத்துக்கட்சி தலைவர்களூம் கண்டனங்கள் செய்தனர்.
இந்நிலையில், மக்கள் மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நாளை கர்நாடக முதல்வர் குமாரசாமையியை சந்திப்பதற்காக இன்று பெங்களூரு புறப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
காலா படத்திற்கு கர்நாடகாவில் விதிக்கப்பட்டிருக்கும் தடையை விலக்க குமாரசாமியிடம் பேசுவிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு,
’’சினிமா தொடர்பாக நான் பெங்களூரு செல்லவில்லை. காலா பட பிரச்சனையை வியாபாரிகள் பார்த்துக்கொள்வார்கள்’’என்று கூறினார்.
திமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க எடுத்துள்ள முடிவு குறித்த கேள்விக்கு,
‘’திமுக எம்.எல்.ஏக்கள் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளது வரவேற்கத்தக்கது.’’என்றார்.
ரஜினியின் சமூக விரோதி வாய்ஸ் குறித்த கேள்விக்கு,
‘’போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான். போராட்டத்திற்கு சில தன்மை உள்ளது. அது தூத்துக்குடியில் நடைபெற்றது. போராட்டத்தை நிறுத்த மாட்டார்கள். நிறுத்தவும் கூடாது. மக்களின் எண்ணங்களையே நான் கருத்தாக தெரிவிக்கிறேன். ’’என்றார்.