தமிழகத்தில் அரசியல் பரபரப்பு உச்சகட்ட நிலையில் எட்டியுள்ளது.இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.அது போல் திமுக தலைமை பிஜேபியிடம் மறைமுகமாக பேசி வருவதாக அதிமுக அமைச்சர்களும், தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் கூறியிருந்தார்.இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மறுப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டு மேலும் பாஜகவோடு நான் பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என்றும், அப்படி நிரூபிக்க தவறினால் மோடி, தமிழிசை அரசியலை விட்டு விலக தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசியலில் தப்புக்கணக்கு போட ஒரு கட்சியின் தலைவர் இருக்கிறார் என்றால் அது மு.க.ஸ்டாலின்தான் என்று கூற வேண்டும். நான் கூறுவதில் எப்போதுமே உண்மை இருக்கும் என்று கூறியுள்ளார்.மேலும், ஊழல் இல்லாத நேர்மையான அரசியல் பாரம்பரியம் எண்ணுடையது என்றும் கூறியுள்ளார். அதேபோல், அரசியலில் எந்த நேரத்தில் ஸ்டாலின் கூறியதை நிரூபிக்க வேண்டுமோ அப்போது நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார் இது தமிழக அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.