நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தனி பெரும்பான்மையுடன் 353 இடங்களை கைப்பற்றியது.இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது.தமிழக்தில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது.அதிமுக,பாஜக கூட்டணி தமிழகத்தில் படு தோல்வியை சந்தித்தது.இந்த நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றார்.
மேலும் மத்திய மந்திரியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதிமுக கட்சி மத்திய அமைச்சரவையில் இடம்பெறவில்லை.இந்த நிலையில் பாஜக சார்பாக சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஹெச்.ராஜாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பாஜக தலைமையிடம் கேட்டுகொண்டதாக செய்திகள் வெளியாகின.ஆனால் பாஜக தலைமை தமிழக பாஜகவினர் மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தியா முழுவதும் பெரும் வெற்றி அடைந்த பாஜக தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து இடத்திலும் தோல்வி அடைந்ததே அதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.மேலும் தமிழக பாஜக நிர்வாகிகள் மீது அதிருப்தியில் இருப்பதால் ஹெச்.ராஜாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க தயங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.