Published on 04/02/2022 | Edited on 04/02/2022
நீட் தேர்வு குறித்த தமிழக அரசின் தீர்மானத்தைத் திருப்பியனுப்பிய ஆளுநரின் செயல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருக்கும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,
“சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, தமிழக ஆளுநர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. ஒரு மாநிலத்தின் தேவையையும், அதன் பிரச்சனைகளையும் களைய அந்த மாநிலத்தை ஆளும் அரசுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உரிமை இல்லை என்று சொல்வதாகவே ஆளுநரின் செயல் அமைந்திருக்கிறது. மாநிலத்தின் உணர்வை மதிக்காமல் அதன் உரிமையைப் பறிக்கும் நிலை; ஜனநாயகத்தைக் கேள்விக்குறி ஆக்குகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.