Skip to main content

“பணப் பட்டுவாடா நடத்திய ஈபிஎஸ்” - மருது அழகுராஜ் குற்றச்சாட்டு

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

"EPS who conducted cash disbursements" - Marudu Aghorraj with the allegation

 

ஒன்றிய துணைச் செயலாளர் கழக கூட்டத்திற்கு ஒரு லட்ச ரூபாய் பணத்துடன் வரவேண்டிய அவசியம் என்ன என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்றைக்கு எடப்பாடி அபகரிப்பு கம்பெனி தங்களது ஆட்களை எல்லாம் அழைத்து எண்ணிக்கை சரிபார்ப்பு நடத்தி இருக்கிறார்கள். அதன் பின் அடுத்த 6 மாதத்திற்கான பட்டுவாடா நடத்தியுள்ளனர். அப்படி பட்டுவாடா நடத்தியதில்தான் ஒன்றிய துணைச் செயலாளரின் ஒரு லட்ச ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது. ஒன்றிய துணைச் செயலாளர் தலைமைக் கழகத்திற்கு ஒரு லட்ச ரூபாய் பணத்துடன் வரவேண்டிய அவசியம் இல்லை. அது கொண்டு வந்த பணமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. கொடுக்கப்பட்ட பணமாகத்தான் இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

 

பதவியில் இல்லாத பழனிசாமிக்கு பல சிக்கல் வந்துள்ளது. இன்றைக்கு வரை இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் என ஓபிஎஸ் தான் உள்ளார். ஆனால் ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் என்று தனக்குத் தானே பட்டாபிஷேகம் செய்து கொண்டார். இதன் பின் தொண்டர்கள் தேர்வு செய்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ஈபிஎஸ் ராஜினாமா செய்துவிட்டார். பதவியில் இல்லாத நிலையில்தான் பழனிசாமி ஆதரவாளர் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

 

ஓபிஎஸ்-ஐ அரசியல் போலி எனச் சொன்னால் அது ஜெயலலிதாவையும் சேர்த்து சொல்வதுபோல் உள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜெயக்குமார் பன்னீர்செல்வத்தைப் பற்றி பேச தகுதியில்லாதவர். ஜெயக்குமார் அதிமுகவை அழிக்க நினைக்கிறார்” எனக் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்