தி.மு.க பொதுக்குழுவுக்கு முன்பாக கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மா.செ.க்கள் கூட்டத்தை கூட்டும் முடிவில் எடப்பாடி இருப்பதாக சொல்லப்படுகிறது. சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்திவிட்டு, பிறகு சட்டமன்றக் கூட்டத்தை நடத்தலாமா? அல்லது சட்டமன்ற கூட்டத்துக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்தலாமா என்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதித்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதேபோல் திருப்தியாக செயல்படாத மா.செ.க்கள் சிலரை மாற்றும் முடிவிலும் எடப்பாடி உள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக, நெல்லை மா.செ.பிரபாகரனுக்கு பதிலாக அந்தப் பதவியில் எக்ஸ் எம்.பி.சௌந்திரராஜனையும், கன்னியாகுமரி மா.செ.அசோகனுக்கு பதில், சிவ.செல்வராஜையும் புதிய மா.செ.க்களாக நியமிக்கவும் அவர் முடிவெடுத்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது. அதேசமயம் அமைச்சரவை மாற்றத்தை உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு வைத்து கொள்ளலாம் என்ற எண்ணமும் அவரிடம் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் சொல்கின்றனர்.