மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
இந்த சந்திப்பு உள்துறை அமைச்சரின் வீட்டில் இல்லாமல் உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் நடந்திருக்கிறது. மேலும் இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் வரை நீடித்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த சந்திப்பின் போது பல்வேறு கோப்புகள் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கையில் எடுத்துச்செல்லப்பட்டது. அந்த கோப்புகளில் உள்ள ஆவணங்கள் மத்திய அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த கோப்புகளில் தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் ஊழல் புகார்கள் போன்றவற்றின் தரவுகள் அதில் இடம் பெற்று இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சருடனான சந்திப்பின் போது எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுகவின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பில் அதிமுக பாஜக உறவு குறித்தும் விவாதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.