Published on 21/10/2020 | Edited on 21/10/2020
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு அரசு சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று (20.10.2020) சென்னை டி.ஜி.பி அலுவலக வளாகத்தில் 'காவலர்கள் வீரவணக்க நாள்' அனுசரிக்கப்பட்டது. அப்போது காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து உயிர்நீத்த காவலர்களின் நினைவுருவ கல்வெட்டை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
பின், டி.ஜி.பி அலுவலக நுழைவு வாயிலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து மரக்கன்றை நட்டனர். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க அமைச்சர்கள், தமிழக காவல்துறை டி.ஜி.பி திரிபாதி, சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.