கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் நாடெங்கும் உத்தரவைப் பிறப்பித்தார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்று நள்ளிரவு முதல் தேசம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவை அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் பிரதமரின் நாடெங்கும் உத்தரவு தமிழகத்தில் கடைப்பிடிக்கும் சூழல் குறித்து அவசர ஆலோசனையை சென்னையிலுள்ள தனது இல்லத்தில் நடத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த ஆலோசனையில், அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி.திரிபாதி உள்பட அனைத்துத் துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில், நாடெங்கும் அமல்படுத்தப்பட்டதில் மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா ? அத்யாவசிய பொருட்களுக்கான கடைகள் எந்தளவுக்கு திறந்துள்ளது ? அந்த கடைகளில் மக்கள் கூட்டம் இருக்கிறதா? உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதித்ததாகவும், வீட்டைவிட்டு வெளியே வரும் மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்துங்கள் என உத்ததவிட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன.
மேலும், வைரஸ் பரவுதலை தடுப்பதில் சுகாதாரத்துறையின் பங்களிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பு நடவடிக்கையிலுள்ள மருத்துவ பணியாளர்கள் , காவல் துறையினர், துப்புறவுத்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு தேவையான உபகரணங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யப்பட்டிருக்கிறதா ? என்பதையும் முதல்வர் விசாரித்திருப்பதாக தெரிகிறது.
மேலும், தனியார் மருத்துவமனைகளை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கலாமா? மக்களுக்கான அத்யாவசிய பொருட்களை வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கு தன்னார்வ குழுக்களை அமைப்பதன் மூலம் மக்களை வீட்டைவிட்டு வெளியே வரத் தேவையில்லைங்கிற வாய்ப்பை ஏற்படுத்தலாமா ? என்பது குறித்தும் ஆலோசித்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன.