முதல்வர் எடப்பாடி இடைத்தேர்தல் முடிவை வைத்து அரசியலில் புதிய திட்டம் ஒன்று போடுவதாக சொல்லப்படுகிறது. இடைத்தேர்தல் நடந்த நாங்குநேரி, விக்கிர வாண்டி ஆகிய தொகுதிகளின் முடிவு தங்களுக்கு சாதகமாக வந்துள்ளதால், அதை மக்களின் மனநிலையாக கருதி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது என்று திட்டம் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை முடிவுகள் தங்களுக்கு எதிராக வந்து இருந்தால், தொடர் மழையைக் காரணமாகக் கூறி, மேலும் கொஞ்ச காலத்துக்கு உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைத்து விடலாம் என்று திட்டம் போட்டுள்ளார். ஆனால் இடைத்தேர்தல் முடிவு அதிமுகவிற்கு சாதகமாக வந்து உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு, தங்கள் கட்சியினருக்கு டாஸ்மாக்கில் இருந்து அவர்களுக்கு வருமானத்துக்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி அரசுக்கு நிர்பந்தம் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். அதனால் பா.ஜ.க. பிரமுகர்களுக்கு டாஸ்மாக் பார் லாபத்தில் ஷேர் கொடுங்கள் என்று டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு எடப்பாடி தகவல் கொடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். அதேபோல் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் தொடக்கமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு பா.ஜ.க. பிரமுகர்களுக்கு டாஸ்மாக் பார் உரிமம் கொடுக்க இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.