
திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் சூர்யா சிவா இணைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஓரிரு நாளில் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவில் இணைய உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளார்.
நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்து, நேர்காணலில் பங்கேற்றார். ஆனால், சூர்யாவுக்கு, திமுக தலைமை சீட் கொடுக்காத நிலையில் அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் சூர்யா சிவா வாட்ஸ் அப் டிபியாக மோடி படத்தை வைத்து பாஜகவுக்கு செல்ல உள்ளதை சூசகமாக தெரிவித்துள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார் சூர்யா சிவா.