கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிக்கும் , 18 சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து முடிந்த நிலையில் வருகின்ற மே 19 ஆம் தேதி நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் , கடல் போன்ற லோக்சபா தேர்தல் களத்தையும், ஆறு போன்ற, 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் களத்தையும் எதிர்கொண்டு, கடந்து விட்டோம். வாய்க்கால் போன்ற, நான்கு சட்டசபை தொகுதி களுக் கான இடைத்தேர்தல் களத்தில், கவனத்துட னும், எச்சரிக்கையுடனும், தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். கடலிலும், ஆற்றிலும் மோசடி செய்ய முனைந்தவர் கள், வாய்க்காலின் இயல்பான போக்கை வழிமறித்து, திசை மாற்றிட எளிதாக முயற்சிப்பர்.
திருப்பரங்குன்றம்,ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலுார் ஆகிய நான்கு தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில், மாநில அமைச்சர்களும், ஆளுங் கட்சி நிர்வாகிகளும் முகாமிடுவர். தங்களிடம் உள்ள ஆட்சியின் கடைசி நேர அதிகார பலத்தை, அடாவடியாகச் செலுத்தி, தி.மு.க., பெறஇருக்கும் வெற்றியைக் களவாடுவதில், முனைப்பு காட்டுவர். அதை முறியடித்திடும் வகையில், தி.மு.க.,வினர் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது இந்த அறிக்கையில் அதிமுக , பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமருவதற்க்காக எந்த நிலைக்கும் ஆளும் கட்சி தரப்பு செயல்படும் ஆகையால் திமுக தொண்டர்களும் ,நிர்வாகிகளும் கடுமையாக உழைத்து சூழ்ச்சிகளை முறியடித்து தி.மு.க.வை வெற்றிபெற பாடு பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.